தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Saturday, April 12, 2008

மிகப்பெரிய சந்தேகம்

இன்று விடியற்காலையில் விழித்து எழுந்தபோது மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எனது மனதில் ஏற்பட்டது.

அதை டோண்டு ராகவன் அவர்களின் கேள்வி பதில் பதிவிற்கு அனுப்பலாமா என்று யோசித்தேன். ஆனால் அவர் வார இறுதியில் பதிலிடுவார் ஆகவே தமிழ்பதிவிடும் நல்லுலகத்தினடமே கேட்டுவிடலாம் என இப்பதிவினை இடுகிறேன்.

பதில் தெரிந்தவர்கள் பின்னுட்டமிட்டு என் சந்தேகத்தை தீர்த்து வைக்கலாம் மற்றும் அறியாதவர்களும் அவற்றை படித்து அறிந்து கொள்ளட்டும் தமிழர்களின் மிக முக்கிய உணவு பொருளான இட்லி அதற்கு இப்பெயர் எப்படி ஏற்பட்டது?

இது ஒரு காரணப்பெயரகவும் தெரியவில்லை வேறு பெயரில் இருந்து மறுவியதாகவும் தெரியவில்லை. தயவுசெய்து விளக்குவீர்களாக.

பி.கு: இதற்கு இட்லிவடை பதிவரிடமிருந்து பதில் வருமா?

5 Comments:

Anonymous Anonymous said...

பெரிய சந்தேகம்??
பொறம்போக்கு சந்தேகம்.

இதற்கு எல்லாம் ஒரு பதிவு.

நாமும் படிக்கிறோம்

oh! my god

April 12, 2008 at 2:51 PM

 
Blogger scssundar said...

நன்றி அனானி அவர்களே!

சந்தேகத்தை சந்தேகம் என்று ஒப்புகொண்டதற்கு..

முடிந்தால் பதில் அளியுங்களேன்

April 12, 2008 at 3:10 PM

 
Blogger பிரபு ராஜதுரை said...

நல்ல கேள்விதான்...ஜேய்பி ஐயா, இராமகி ஐயா அவர்களிடம் கேட்டால் பதில் கிடைக்கலாம்.

June 29, 2008 at 8:33 AM

 
Blogger சதங்கா (Sathanga) said...

சுந்தர்,

சும்மா ஜாலிக்கா அந்தக் கேள்விய பதிவா போட்டேன். நண்பர் ஒருவர், என்னையா ப்லாக் அழுவாச்சியா போகுதுனு சொன்னாரு, அதனால. மற்றபடி சீரியஸான கேள்வி எல்லாம் கேக்கலை. :)))))

பட் உங்க கேள்விக்கு, பதில் தெரிந்தால் வந்து சொல்கிறேன். :))

June 29, 2008 at 7:30 PM

 
Blogger கூடுதுறை said...

இதற்கான பதில் விக்கிபிடியா தமிழில் உள்ளது. அதன் url http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி.இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மறுவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இட்லியினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் இந்த பதார்த்தங்கள் உபயோகப்படுகின்றன.

* சட்னி
* சாம்பார்
* மிளகாய்ப் பொடி
* சர்க்கரை
* தயிர்

June 29, 2008 at 7:47 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home