தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Wednesday, April 2, 2008

மிகப்பெரிய சந்தேகம்

இன்று விடியற்காலையில் விழித்து எழுந்தபோது மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எனது மனதில் ஏற்பட்டது. அதை டோண்டு ராகவன் அவர்களின் கேள்வி பதில் பதிவிற்கு அனுப்பலாமா என்று யோசித்தேன்.

ஆனால் அவர் வார இறுதியில் பதிலிடுவார் ஆகவே தமிழ்பதிவிடும் நல்லுலகத்தினடமே கேட்டுவிடலாம் என இப்பதிவினை இடுகிறேன்.

பதில் தெரிந்தவர்கள் பின்னுட்டமிட்டு என் சந்தேகத்தை தீர்த்து வைக்கலாம் மற்றும் அறியாதவர்களும் அவற்றை படித்து அறிந்து கொள்ளட்டும்

தமிழர்களின் மிக முக்கிய உணவு பொருளான இட்லி

அதற்கு இப்பெயர் எப்படி ஏற்பட்டது?

இது ஒரு காரணப்பெயரகவும் தெரியவில்லை

வேறு பெயரில் இருந்து மறுவியதாகவும் தெரியவில்லை.

தயவுசெய்து விளக்குவீர்களாக.

பி.கு: இதற்கு இட்லிவடை பதிவரிடமிருந்து பதில் வருமா?

1 Comments:

Anonymous வால்பையன் said...

நம்ம ஊர் பக்கம் இதை இக்லி என்று அழைப்பார்கள் தெரியுமா

வால்பையன்

April 4, 2008 at 12:59 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home