தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Wednesday, March 12, 2008

பதிவர் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு

பதிவர் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு


பல வெளியூர்களில் சந்திப்பு நடப்பதை பார்த்துவிட்டு நாமும் அதைப்போல ஒர் சந்திப்பு ஏற்படத்தாலாம்என நானும் வால்பையனும் பேசிக்கொண்டோம்.

ஆனால் ஈரோட்டில் விரல் விட்டு எண்ணக்ககூடிய அளவுக்குகூட பதிவர்கள்இருப்பதாக தெரியவில்லை.ஆகவே, ஈரோடு மாவட்ட அளவில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாமா?எனக்கேட்டார்.

அதுவும் நல்ல யோசனை எனக்கூறி இவ்வழைப்பை பதிவிடுகிறேன்.ஈரோடு மாவட்டத்தின் பதிவுலக தங்கங்களே தங்களின் மேலான ஆதரவை பின்னுட்டத்தில் இட்டு தங்களின் வருகையை தெரிவியுங்கள்...


வர இயலாதவர்களும் பின்னுட்டமிட்டு தங்களின் இருப்பையாவது தெரிவுங்கள்.பதிவிடாத வாசகர்களும் கலந்துகொள்ளாலாம். படிக்கமட்டும் நேரம் உள்ள வாசகர்கள் அதிகம் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.


தினம் நேரம் ஆகியவைகளை கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம்.

இதில் நாமக்கல் மாவட்டத்தையும் இணைத்துக்கொள்ளாலமா?யோசனை தெரிவியுங்கள்

5 Comments:

Blogger SanJai said...

அட பாவிகளா.. நான் ஈரோட்ல குப்பை கொட்டிட்டு இருந்த வரைக்கும் இது மாதிரி ஒண்ணுமே பண்ணலை.. நான் கோவை வந்ததும் ஆளாளுக்கு துளிர் விட்டு போச்சி.. கவனிக்கிறேன்..:))

என்னாது நாமக்கல் மாவட்டத்தை சேக்கறிங்களா? அங்க அதிகமான பதிவர்கள் இருக்கிற மாதிரி தெரியலை நண்பரே. பேசாமா கரூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த்வங்க வர மாதிரி பண்ணுங்க... பதிவர்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணி புரிபவர்கள் தான். ஆகவே இந்த பகுதிகளில் மிக சிலரே இருக்க வாய்ப்பு உண்டு.

April 12, 2008 at 1:44 PM

 
Anonymous velarasi said...

உங்கள் மாவட்ட பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகள்.

April 12, 2008 at 1:48 PM

 
Blogger யாரோ ஒருவன் said...

எப்போ, தேதி சொல்லுங்க வாரேன்.

April 12, 2008 at 6:27 PM

 
Blogger தாமோதர் சந்துரு said...

உள்ளேன் அய்யா. எங்கே, எப்படி, எப்போன்னு சொல்லுங்க. அப்படியே சந்திப்பிலே சுண்டக் கஞ்சிக்கும் ஏற்பாடு பண்ணீருங்க. கூட்டத்தக் கூட்டிருவோம்.

April 12, 2008 at 6:32 PM

 
Anonymous நிலா said...

/ஆனால் ஈரோட்டில் விரல் விட்டு எண்ணக்ககூடிய அளவுக்குகூட பதிவர்கள்
இருப்பதாக தெரியவில்லை.//

என்ன இப்படி சொல்லிபுட்டீங்க? எத்தன பேர் இருக்காங்க தெரியுமா?

http://mpguys.blogspot.com/ இங்க கொஞ்சம் லிங்க் இருக்கு.

அது இல்லாமயும் இன்னும் சிலர் இருக்காங்க

April 13, 2008 at 3:05 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home