தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Sunday, July 6, 2008

அடுத்த காமெடி - யாருடன் கூட்டு? கார்த்திக் தகவல் -

இதில் அடைப்புக்குறிக்குள் இருப்பது மட்டும்தான் நான் எழுதியது...

கவுரமான எண்ணிக்கையில் இடம் தரும் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைக்க நாடாளும் மக்கள் கட்சி தயாராக இருப்பதாக, அதன் தலைவரான நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

(கவுரமான எண்ணிக்கை இடம் = நெஞ்சத்தில் இடம் )

இதுதொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழ்நிலையில்தான் உள்ளன என்றார்.

(அதாவது எனது கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால்தான் 3 லக்க ஓட்டாவது பெறமுடியும்)

தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு நடந்து வருவதாகக் குறிப்பிட்ட கார்த்திக், மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரம் தனது அதிக இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

( பார்வர்டு பிளாக் கட்சியுடன் பேச்சு வார்த்தை இல்லையா?)

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை வரவேற்ற கார்த்திக், தற்போதைய சூழ்நிலையில் அணு சக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு தேவையானது என்றார்.

(ஒகே சொல்லிவிட்டார் இடதுசாரிகள் இனி மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்)

Labels:

Sunday, June 29, 2008

மன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை - பதிவர்களுக்கு வசதி

இணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்-லைன் மனோ சிகிச்சை அல்லது ஈ-தெரபி வழங்கப்படுகிறது. இது மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிசைகளை விட சிறப்பாக உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வுகளில் கண்டுபிடித்த விவரங்களை ஜர்னல் ஆஃப் மெடிகல் இன்டர்நெட் ரிசர்ச் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது உலகெங்கும் வளரும் பொருளாதாரங்களால் ஏற்படும் வாழ்நிலை நெருக்கடிகளில் பலர் மனநோய்க்கு உள்ளாகின்றனர். ஆனால் இதற்கான சிகிச்சையை அளிக்க மருத்துவர்களுக்கு போதிய நேரம் இல்லை என்றும், குடும்ப மருத்துவர்களுக்கு நோயை தீர்ப்பதற்க்கான ஆதாரங்களும் குறைந்து வருவதாகவும் இந்த ஆய்வில் பணியற்றிய கெர்ரி ஷான்ட்லி என்பவர் கூறியுள்ளார்.

உதாரணமாக மனஅழுத்தம், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் "பேனிக் ஆன்-லைன்" என்று அழைக்கப்படும் இ-தெரபி மூலம் வெகுவாக குணமடைந்து வருவதாக அந்த பத்திரிக்கை அறிக்கை ஆய்வை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் 30% பேர் இத்தகைய மன நோயிலிருந்து முழுவதும் விடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முதற்கட்ட மனநோயான மன அழுத்தம், மன உளைச்சல், மனப் பதட்டம், டென்ஷன் உள்ள ஒரு 96 பேரை ஆன்-லைன் பேனிக் தெரபிக்கு உட்படுத்தியது. இவர்கள் 12 வாரங்களில் குணமடைந்தனர்.

இந்த ஆன்-லைன் சிகிச்சையில் பங்கேற்றவர்களுக்கு மனோவியல் நிபுணர் தொலைபேசி மூலம் பேசி பிரச்சனைகளை அறிந்து கொள்கிறார். பிறகு தொடர்ச்சியான பல ஆன்-லைன் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு 6 மாத காலம் தொடர் மருத்துவ கண்காணிப்பும் நடத்தப்படுகிறது.

அதாவது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களின் மனநிலையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கும், ஆன்-லைன் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், உட்கார்ந்த இடத்திலேயே சொற்ப செலவில் நோய்களுக்கு சிகிச்சை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே இந்த ஆன்-லைன் சிகிச்சை நிரூபித்துள்ளது.

Labels:

Sunday, June 22, 2008

விஜயகாந்த், சரத்தைத் தொடர்ந்து விஜய்? (கடவுளே!!!)

(இதில் அடைப்பக்குறிக்குள்ளில் இருப்பது மட்டும் நான் எழுதியது)

நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கும் காலமாகி விட்டது என்றே கூறலாம். (ஓஓஓ....)

கேப்டன் விஜயகாந்த் கட்சி தொடங்கி கடந்த சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கி ஒரு கலக்கு கலக்கி விட்டார். (அதுதான் சாக்கடை தெளிந்துவிட்டதா???)

சரத்குமார் திமுகவில் இருந்து வெளியேறி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கியுள்ளார். ஃபார்வர்டு பிளாக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

(ஒரு கட்சியில் இருந்தே பப்பு வேகவில்லை)

இந்த வரிசையில் புதிதாக இணையப் போகிறவர் இளைய தளபதி விஜய். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக தனது பிறந்த நாளில், ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி மன்றக் கொடியை வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

(நமது நாட்டின் பணவிக்கம் உடனே 3% சதவிகதத்திற்கு வந்துவிடும்... விலைவாசி குறைந்துவிடும்..... சென்சக்ஸ் 25000 புள்ளிகளை தாண்டிவிடும்?)

ஆனால் வழக்கம் போல் அரசியல் ஆசையோ அல்லது நோக்கமோ தனக்கு இல்லை என்று விஜய் அறிவிப்பார். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்?

(அது தெரிந்தால் ம்ம்ம்ம்ம்.....)
(பின்குறிப்பு: நான் அஜித் ரசிகன் அல்ல)

Labels:

Thursday, May 8, 2008

ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை!

எனது சேவை இங்கிலாந்திற்கு தேவை இல்லை

இனி நான் அங்கு செல்ல இயலாது.


(வால்பையனும் செல்ல முடியாது ஹைய்யா !!!)


லண்டன்: போதிய ஆங்கில அறிவு இல்லாமல் யாரும் இனிமேல் இங்கிலாந்துக்குச் செல்ல முடியாது. குறிப்பாக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் இங்கிலாந்துக்குள் வர முடியாது என அந்த நாட்டு அரசு தடாலடியாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்குள் வர விரும்புவோருக்கு புதிய சட்ட திட்டங்களை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி போதிய ஆங்கில அறிவு இல்லாவிட்டால் இனிமேல் இங்கிலாந்துக்குள் நுழைய முடியாதாம். இந்தப் புதிய உத்தரவின் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் வெளிநாட்டினரை தடுக்க முடியும் என அந்நாட்டு அரசு கருதுகிறது.இந்த புதிய விதிமுறைக்கு சர்வதேச விளையாட்டு வீரர்களும் விதி விலக்கல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் பெரும் பாதிப்படைவார்கள் என்று கருதப்படுகிறது.குறிப்பாக பிரேசில் நாட்டு கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ, அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. எனவே இவர்களால் இங்கிலாந்துக்குள் நுழைவது இயலாத காரியமாகியுள்ளது.

இந்த விதிமுறையை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் இங்கிலாந்து தெளிவுபடுத்தியுள்ளது.சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்தால்தான் இங்கிலாந்துக்குள் இனி நுழைய முடியும் என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளதால், பல நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், பல நட்சத்திர வீரர்கள் தங்களது நாட்டு அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்படலாம் என கருதப்படுகிறது.இந்தப் புதிய விதிமுறையை இங்கிலாந்து நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் லியாம் பைர்ன் நேற்று அறிமுகப்படுத்தினார்.Source: Oneindia

Labels:

Wednesday, May 7, 2008

என்று தணியும் இந்த மோகம் !! இன்று அட்சய திரிதியை: தங்கத்தை மிஞ்சுமா பிளாட்டினம்?



அட்சய திரிதியை: தங்கத்தை மிஞ்சுமா பிளாட்டினம்?
சென்னை: அட்சய திரிதியை இன்று மற்றும் நாளை (7 மற்றும் 8ம் தேதி) கொண்டாடப்படுகிறது.


இந்தாண்டு அட்சய திரிதியைக்கு பிளாட்டினம் வாங்குவது நல்லது என்று பிரபல ஜோதிடர்கள் கூறியுள்ளதால் அதை வாங்க கூட்டம் அலைமோதலாம் எனத் தெரிகிறது.சித்திரை மாத வளர்பிறை காலத்தில் 3ம் பிறை தோன்றும் நாள்தான் `அட்சய திரிதியை'. அன்றைய தினம் சந்திரனும், சூரியனும் உச்சம் பெற்றிருப்பதால் காரிய சித்தியும், பொருள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.நகை, வீடு, மனை, வாகனம் போன்றவை இந்த தினத்தில் வாங்குவது விசேஷம். அட்சய திரிதியை தினத்தில் வாங்கும் பொருட்களால் அதிர்ஷ்டம் உண்டாகும். அதிலும் தங்கம் வாங்குவது மங்களகரமானது என்பது நம்பிக்கை.

இந்த நாளில்தான் திருமாலின் 6வது அவதாரமாகிய பரசுராமர் அவதரித்ததாகவும், சொர்க்கத்தில் இருந்து கங்கை பூமிக்கு வந்த தினமாகவும், திரேதா யுகம் தொடங்கியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.தவிர, புதிய தொழில் தொடங்குவது, புதிய வங்கி கணக்குகள் தொடங்குவது போன்றவற்றை இந்த தினத்தில் பலர் மேற்கொள்கின்றனர்.

பிளாட்டினம்-தங்கம் போட்டி:ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும் அந்தாண்டுக்கான பூ, விலங்கு, உலோகம், திசை ஒன்றை விசேஷமாக கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு அட்சய திரிதியைக்கு வெண் தங்கம் எனப்படும் பிளாட்டினம் அல்லது வெள்ளி வாங்குவது நல்லது என்று பிரபல ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாகவே பிளாட்டினம் நகைகள் பிரபலமாகி வருகின்றன. இருந்தாலும் பெண்களிடம் தங்கத்துக்கு உள்ள மவுசு பிளாட்டினத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது உண்மை. இதில், எங்களிடம் பிளாட்டினம் நகையும் இருக்கிறது என்று பெருமைக்காக வாங்கி வைத்திருக்கும் பெண்களும் உள்ளனர்.

Labels:

Tuesday, April 22, 2008

எம்பி தொகுதி நிதியை ஒழிக்க சோம்நாத் விருப்பம்

எம்பி தொகுதி நிதியை ஒழிக்க சோம்நாத் விருப்பம்



நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்போதுள்ள 2 கோடி ரூபாய் என்பதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்படும் நிலையில், அதுபோன்ற மேம்பாட்டு நிதி திட்டத்தையை ஒழிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக மக்களவையில் இன்று கேள்விநேரத்தின் போது பேசிய சமாஜ்வாடிக் கட்சி உறுப்பினர் ரியோட்டி ராமன் சிங், எம்.பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரினார்.

இதன்மூலம் மக்களுக்கு அதிக அளவில் உறுப்பினர்கள் உதவ முடியும் என்றும் அவர் கூறினார்.

இதற்குப் பதிலளித்த மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, இந்த விஷயத்தில் தமது கருத்து உறுப்பினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்காது என்றும், தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.

ராமன் சிங் விடுத்த கோரிக்கைக்கு ஒட்டுமொத்த சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்।

source: msn


// இந்த நிதி மூலமாக நமது மக்களுக்கு சில நல்லவைகள் நடைபெற்றுவருகின்றது। அதை ஒழித்துவிட விரும்புகின்றனர்//




மர்பி விதிகள்: 11 - 15 வரை




11. எந்த ஒரு விசயத்தையும் முட்டாள்தனமே இல்லாமல் படைக்க இயலாது. எனேன்றால் முட்டாள்கள் அவ்வளவு அறிவு ஜீவிகள்.


12. எந்த ஒரு விசயமும் நீங்கள் உணர்வது போல் அவ்வளவு எளிதில்லை.


13. ஒவ்வொரு தீர்வுமே ஒரு பிரச்சினைக்கு வழிகாட்டி.


14. ஒரு தாளில் உள்ள தகவல் எவ்வளவு தூரம் உங்களால் படிக்க இயலாமல் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது முக்கியத்துவம் வாய்ந்தது!


15. வெண்ணை தடவிய பிறகு கீழே விழும் ரொட்டி எந்த பக்கம் தரையில் விழும் என்பது உங்கள் கார்பெட்டின் விலையைப் பொருத்தது.


Labels:

மதுரை தேவர் சிலை அவமதிப்பு-மன நோயாளி கைது

மதுரை: மதுரையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நேற்று அவமதிக்கப்பட்டிருந்தது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நூற்றுக்கணக்கான தேவரினத்தவர் கூடி அவமதித்தவரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தனர்.பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.


இந்த நிலையில் இன்று அதிகாலை, தேவர் சிலை உள்ள பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவரது பெயர் திருவழகன் என்றும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.


அவர்தான் தேவர் சிலையை அவமதித்தது என்றும் தெரிய வந்தது. அவர் மன நோயாளி போல தென்படுகிறார்.இருப்பினும் அவரைக் கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Source: Oneindia



/இதற்கு தனி விமர்சனம் தேவையில்லை/


மர்பி விதிகள் முதல்பகுதிக்கு கிளிக் செய்யுங்கள்

மர்பியின் விதிகள்: 6 - 10


6. எல்லாமே சரியாக நடப்பது போல் தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்.


7. இயற்கை எப்போதுமே தனக்குள் தவறை ஒளித்து வைத்துள்ளது. ஆனால் அது எப்போதுமே அதை அதிக நேரத்திற்கு மறைத்து வைப்பதில்லை.


8. புன்னகை புரியுங்கள். நாளை இதைவிட மோசமாகத்தான் இருக்கும்.


9. எல்லா விசயங்களும் ஒரே நேரத்தில் தான் தவறாக நடக்க ஆரம்பிக்கும்.


10. உடைபொடும் பொருளும் அதன் மதிப்பும் எப்போதுமே நேர் விகிதித்திலேயே இருக்கும்.

Labels: