தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Wednesday, May 7, 2008

என்று தணியும் இந்த மோகம் !! இன்று அட்சய திரிதியை: தங்கத்தை மிஞ்சுமா பிளாட்டினம்?அட்சய திரிதியை: தங்கத்தை மிஞ்சுமா பிளாட்டினம்?
சென்னை: அட்சய திரிதியை இன்று மற்றும் நாளை (7 மற்றும் 8ம் தேதி) கொண்டாடப்படுகிறது.


இந்தாண்டு அட்சய திரிதியைக்கு பிளாட்டினம் வாங்குவது நல்லது என்று பிரபல ஜோதிடர்கள் கூறியுள்ளதால் அதை வாங்க கூட்டம் அலைமோதலாம் எனத் தெரிகிறது.சித்திரை மாத வளர்பிறை காலத்தில் 3ம் பிறை தோன்றும் நாள்தான் `அட்சய திரிதியை'. அன்றைய தினம் சந்திரனும், சூரியனும் உச்சம் பெற்றிருப்பதால் காரிய சித்தியும், பொருள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.நகை, வீடு, மனை, வாகனம் போன்றவை இந்த தினத்தில் வாங்குவது விசேஷம். அட்சய திரிதியை தினத்தில் வாங்கும் பொருட்களால் அதிர்ஷ்டம் உண்டாகும். அதிலும் தங்கம் வாங்குவது மங்களகரமானது என்பது நம்பிக்கை.

இந்த நாளில்தான் திருமாலின் 6வது அவதாரமாகிய பரசுராமர் அவதரித்ததாகவும், சொர்க்கத்தில் இருந்து கங்கை பூமிக்கு வந்த தினமாகவும், திரேதா யுகம் தொடங்கியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.தவிர, புதிய தொழில் தொடங்குவது, புதிய வங்கி கணக்குகள் தொடங்குவது போன்றவற்றை இந்த தினத்தில் பலர் மேற்கொள்கின்றனர்.

பிளாட்டினம்-தங்கம் போட்டி:ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும் அந்தாண்டுக்கான பூ, விலங்கு, உலோகம், திசை ஒன்றை விசேஷமாக கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு அட்சய திரிதியைக்கு வெண் தங்கம் எனப்படும் பிளாட்டினம் அல்லது வெள்ளி வாங்குவது நல்லது என்று பிரபல ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாகவே பிளாட்டினம் நகைகள் பிரபலமாகி வருகின்றன. இருந்தாலும் பெண்களிடம் தங்கத்துக்கு உள்ள மவுசு பிளாட்டினத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது உண்மை. இதில், எங்களிடம் பிளாட்டினம் நகையும் இருக்கிறது என்று பெருமைக்காக வாங்கி வைத்திருக்கும் பெண்களும் உள்ளனர்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home