தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Sunday, June 22, 2008

என்.எஃப்.சி. தொழில் நுட்பம் என்பது என்ன?

இரண்டு தொடர்புக் கருவிகளுக்கு இடையே கம்பியில்லா தொடர்பு பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யும், ஒரு வகையில் செல்பேசிகளுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட தொழில் நுட்பம் என்.எஃப்.சி என்று கூறலாம்.

நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் என்பதன் சுருக்கமே என்.எஃப்.சி. என்று அழைக்கப்படுகிறது.

தற்போது செல்பேசிகளிடையேயான தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வரும் தொழில்நுட்பம் ப்ளூடூத் ஆகும். என்.எஃப்.சி. தொழில்நுட்பமானது, இரண்டு செல்பேசிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தை சாத்தியப்படுத்துகிறது என்றால் ப்ளூடூத் பல சாதனங்களுக்கு இடையே தரவுப் பரிமாற்றங்களை சாத்தியமாக்குவது.

ஐ.எஸ்.ஓ. 14443 தொழில் நுட்பத்தின் ஒரு எளிய விரிவாக்கமே இந்த என்.எஃப்.சி. தொழில் நுட்பம், ஸ்மார்ட்கார்ட் இன்டர்ஃபேஸ் மற்றும் ரீடர் ஆகியவற்றை ஒரே சாதனத்தில் கொண்டதுதான் என்.எஃப்.சி.

இது ஏற்கனவே உள்ள ஐ.எஸ்.ஓ 14443 ஸ்மார்ட்கார்டுகள் மற்றும் ரீடர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் ஏற்கனவே பொதுப் பயன்பாடுகளில் எலக்ட்ரானிக் எந்திரங்களுடன் சுலபமாக ஒத்துப்போகும் தன்மை கொண்டது. என்.எஃப்.சி. பெரும்பாலும் செல்பேசிகளில் பயன்படுத்துவதற்காகவே கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

என்.எஃப்.சி. தொழில்நுட்பம் மூலம் ஒரு 10 செ.மீ வரை உள்ள தூரத்தில் இருந்து கொண்டு இரண்டு சாதனங்களிடையே தரவுப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். ஒயர் இணைப்பு தேவையில்லை.

இரு சாதனங்களின் உள்ளேயும் ஒரு சிறு லூப் ஆன்டெனா பொருத்தப்படும். இது உலகம் முழுதும் கிடைக்கும் ரேடியோ அலைவரிசையில் இயங்கும் தன்மை கொண்டது. இதன் பேன்ட்வித் சுமார் 2 மெகா ஹெர்ட்ஸ். அதிகபட்சமாக 424 கிலோபைட் தகவல்களை பறிமாறிக் கொள்ள முடியும்.

தற்போது செல்பேசிகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த தொழில் நுட்பம் விரைவில் செல்பேசியே கிரெடிட் கார்ட், டெபிட் கார்டாக பயன்படுத்த உபயோகப்படும். எந்த ஒரு பொருட்கள், அட்டைகளில் உள்ள அடையாள குறிகளுக்கு இந்த தொழில் நுட்பம் பயன்படுமாறு விரிவடையும்.

மேலும் எதிர்காலத்தில் ப்ளூடூத் 2.1 சாதனங்களுடன் என்.எஃப்.சி. தொழில் நுட்பமும் சேர்க்கப்படும். இதனால் ப்ளூடூத் செயலை முடுக்கி விட்டு காத்திருக்க வேண்டிய நேரம் மிச்சம். செல்பேசியை லேசாகத் தொட்டாலே போதும், ப்ளூ-டூத் செயல்படத் துவங்கிவிடும்.

மேலும் எலெக்ட்ரானிக் டிக்கெட்டிங், எலக்ட்ரானிக் கீகள் உள்ளிட்ட பல எதிர்கால பயன்பாடுகளும் இதற்கு உண்டு

மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கில் சென்று அறிந்து கொள்ளுங்கள்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home