தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Sunday, June 29, 2008

மன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை - பதிவர்களுக்கு வசதி

இணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்-லைன் மனோ சிகிச்சை அல்லது ஈ-தெரபி வழங்கப்படுகிறது. இது மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிசைகளை விட சிறப்பாக உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வுகளில் கண்டுபிடித்த விவரங்களை ஜர்னல் ஆஃப் மெடிகல் இன்டர்நெட் ரிசர்ச் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது உலகெங்கும் வளரும் பொருளாதாரங்களால் ஏற்படும் வாழ்நிலை நெருக்கடிகளில் பலர் மனநோய்க்கு உள்ளாகின்றனர். ஆனால் இதற்கான சிகிச்சையை அளிக்க மருத்துவர்களுக்கு போதிய நேரம் இல்லை என்றும், குடும்ப மருத்துவர்களுக்கு நோயை தீர்ப்பதற்க்கான ஆதாரங்களும் குறைந்து வருவதாகவும் இந்த ஆய்வில் பணியற்றிய கெர்ரி ஷான்ட்லி என்பவர் கூறியுள்ளார்.

உதாரணமாக மனஅழுத்தம், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் "பேனிக் ஆன்-லைன்" என்று அழைக்கப்படும் இ-தெரபி மூலம் வெகுவாக குணமடைந்து வருவதாக அந்த பத்திரிக்கை அறிக்கை ஆய்வை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் 30% பேர் இத்தகைய மன நோயிலிருந்து முழுவதும் விடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முதற்கட்ட மனநோயான மன அழுத்தம், மன உளைச்சல், மனப் பதட்டம், டென்ஷன் உள்ள ஒரு 96 பேரை ஆன்-லைன் பேனிக் தெரபிக்கு உட்படுத்தியது. இவர்கள் 12 வாரங்களில் குணமடைந்தனர்.

இந்த ஆன்-லைன் சிகிச்சையில் பங்கேற்றவர்களுக்கு மனோவியல் நிபுணர் தொலைபேசி மூலம் பேசி பிரச்சனைகளை அறிந்து கொள்கிறார். பிறகு தொடர்ச்சியான பல ஆன்-லைன் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு 6 மாத காலம் தொடர் மருத்துவ கண்காணிப்பும் நடத்தப்படுகிறது.

அதாவது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களின் மனநிலையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கும், ஆன்-லைன் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், உட்கார்ந்த இடத்திலேயே சொற்ப செலவில் நோய்களுக்கு சிகிச்சை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே இந்த ஆன்-லைன் சிகிச்சை நிரூபித்துள்ளது.

Labels:

3 Comments:

Blogger ஜிம்ஷா said...

நல்ல தகவல். பயனுள்ளதாக இருந்தது.

June 29, 2008 at 11:23 AM

 
Blogger கூடுதுறை said...

நன்றி... ஜிம்ஷா...

உங்களுக்கு உபயோகமாக இருந்தால் சரி...

June 29, 2008 at 11:31 AM

 
Blogger ஒரு வழிப்போக்கன் said...

பயனுள்ள தகவல்!!!

June 29, 2008 at 9:00 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home