தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Tuesday, April 22, 2008

எம்பி தொகுதி நிதியை ஒழிக்க சோம்நாத் விருப்பம்

எம்பி தொகுதி நிதியை ஒழிக்க சோம்நாத் விருப்பம்நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்போதுள்ள 2 கோடி ரூபாய் என்பதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்படும் நிலையில், அதுபோன்ற மேம்பாட்டு நிதி திட்டத்தையை ஒழிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக மக்களவையில் இன்று கேள்விநேரத்தின் போது பேசிய சமாஜ்வாடிக் கட்சி உறுப்பினர் ரியோட்டி ராமன் சிங், எம்.பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரினார்.

இதன்மூலம் மக்களுக்கு அதிக அளவில் உறுப்பினர்கள் உதவ முடியும் என்றும் அவர் கூறினார்.

இதற்குப் பதிலளித்த மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, இந்த விஷயத்தில் தமது கருத்து உறுப்பினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்காது என்றும், தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.

ராமன் சிங் விடுத்த கோரிக்கைக்கு ஒட்டுமொத்த சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்।

source: msn


// இந்த நிதி மூலமாக நமது மக்களுக்கு சில நல்லவைகள் நடைபெற்றுவருகின்றது। அதை ஒழித்துவிட விரும்புகின்றனர்//
மர்பி விதிகள்: 11 - 15 வரை
11. எந்த ஒரு விசயத்தையும் முட்டாள்தனமே இல்லாமல் படைக்க இயலாது. எனேன்றால் முட்டாள்கள் அவ்வளவு அறிவு ஜீவிகள்.


12. எந்த ஒரு விசயமும் நீங்கள் உணர்வது போல் அவ்வளவு எளிதில்லை.


13. ஒவ்வொரு தீர்வுமே ஒரு பிரச்சினைக்கு வழிகாட்டி.


14. ஒரு தாளில் உள்ள தகவல் எவ்வளவு தூரம் உங்களால் படிக்க இயலாமல் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது முக்கியத்துவம் வாய்ந்தது!


15. வெண்ணை தடவிய பிறகு கீழே விழும் ரொட்டி எந்த பக்கம் தரையில் விழும் என்பது உங்கள் கார்பெட்டின் விலையைப் பொருத்தது.


Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home