தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Sunday, June 22, 2008

விஜயகாந்த், சரத்தைத் தொடர்ந்து விஜய்? (கடவுளே!!!)

(இதில் அடைப்பக்குறிக்குள்ளில் இருப்பது மட்டும் நான் எழுதியது)

நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கும் காலமாகி விட்டது என்றே கூறலாம். (ஓஓஓ....)

கேப்டன் விஜயகாந்த் கட்சி தொடங்கி கடந்த சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கி ஒரு கலக்கு கலக்கி விட்டார். (அதுதான் சாக்கடை தெளிந்துவிட்டதா???)

சரத்குமார் திமுகவில் இருந்து வெளியேறி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கியுள்ளார். ஃபார்வர்டு பிளாக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

(ஒரு கட்சியில் இருந்தே பப்பு வேகவில்லை)

இந்த வரிசையில் புதிதாக இணையப் போகிறவர் இளைய தளபதி விஜய். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக தனது பிறந்த நாளில், ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி மன்றக் கொடியை வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

(நமது நாட்டின் பணவிக்கம் உடனே 3% சதவிகதத்திற்கு வந்துவிடும்... விலைவாசி குறைந்துவிடும்..... சென்சக்ஸ் 25000 புள்ளிகளை தாண்டிவிடும்?)

ஆனால் வழக்கம் போல் அரசியல் ஆசையோ அல்லது நோக்கமோ தனக்கு இல்லை என்று விஜய் அறிவிப்பார். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்?

(அது தெரிந்தால் ம்ம்ம்ம்ம்.....)
(பின்குறிப்பு: நான் அஜித் ரசிகன் அல்ல)

Labels:

6 Comments:

Blogger ers said...

நடிப்பவர்களை மட்டும் தான் நம்ம ஜனங்களுக்கு பிடிக்கும். நான் அரசியல்வாதிங்களை சொல்றேங்க... ராமன் ஆண்டாலும்... ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை. இந்தப்பாட்டு தான் வெகுஜனங்களுக்கு பிடிக்குமுங்கோ..

June 22, 2008 at 1:33 PM

 
Blogger Nimal said...

இனி இந்த குருவி அரசியல் வானில் கொடிகட்டி பறக்கும்... :))

அப்ப இனி அரசியல் மேடைகளிலும் பஞ்ச் வசனங்களும் குத்து பாட்டும் எதிர்பார்க்கலாம்....!!!

June 22, 2008 at 1:40 PM

 
Blogger rapp said...

ஆஹா, பன்ச் டயாலாக் பேசி படத்து மூலமா நம்மள சாகடிக்கறது பத்தாதா?

June 22, 2008 at 4:53 PM

 
Blogger கூடுதுறை said...

//நடிப்பவர்களை மட்டும் தான் நம்ம ஜனங்களுக்கு பிடிக்கும்//

அப்போ சிவாஜி?

அரசியல்வாதி நடிப்பதும் நடிகர் அரசியல்வாதி ஆவதும் தான் இங்கு நடப்பதுதானே...

June 22, 2008 at 6:06 PM

 
Blogger கூடுதுறை said...

//இனி இந்த குருவி அரசியல் வானில் கொடிகட்டி பறக்கும்.//

குருவி மட்டும்தானா? அப்போ போக்கிரி என்ன செய்வார்?

நிமல் கூறுங்களேன்...

June 22, 2008 at 6:07 PM

 
Blogger கூடுதுறை said...

//ஆஹா, பன்ச் டயாலாக் பேசி படத்து மூலமா நம்மள சாகடிக்கறது பத்தாதா?//

அந்த ரெண்டேமுக்கால் நால் தாடி என்னவாயிற்று?

June 22, 2008 at 6:08 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home