தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Monday, April 28, 2008

10 சாட்டிலைட்கள் இன்று ஏவியது பி.எஸ்.எல்.வி - இஸ்ரோ சாதனை

சென்னை: உலகிலேயே முதல் முறையாக 10 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) இன்று சாதனை படைத்தது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில், 10 செயற்கைக் கோள்களை ஏவத் திட்டமிட்டது.அதன்படி கார்ட்டோஸாட்-2ஏ, இந்திய சிறு செயற்கைகோள் (ஐஎம்எஸ்-1) மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் என்று 10 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.8 நானோ செயற்கைகோள்களும் கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடையது. இவை ஒவ்வொன்றும் 3 முதல் 16 கிலோ எடை கொண்டது। 8 நானோ செயற்கை கோள்களின் மொத்த எடை 50 கிலோ।இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களான கார்ட்டோஸாட்-2ஏ 690 கிலோ எடை கொண்டது।


இதில் அதிநவீன பேன் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது।இஸ்ரோ வடிவமைத்த (ஐஎம்எஸ்-1) இந்திய சிறு செயற்கைகோள் 83 கிலோ எடை கொண்டது. இதில் மல்டிஸ்பெக்ட்ரல் கேமரா மற்றும் ஹைபர்ஸ்பெக்டரல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.செயற்கைக் கோள்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டு கடந்த 18ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.சனிக்கிழமை கவுன்ட்டவுன் தொடங்கியது. இன்று காலை ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளி மையத்தில் உள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.இது பி.எஸ்.எல்.வி வரிசையில் 13வது பயணமாகும்.உலக அளவில் ஒரே சமயத்தில் அதிக அளவிலான செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டின் மூலம் செலுத்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ரஷ்யா அதிகபட்சமாக 8 செயற்கைக் கோள்களை செலுத்தியுள்ளது. ஏரியான் 7 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றுள்ளது. அமெரிக்கா ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 4 செயற்கைக் கோள்களை மட்டுமே அனுப்புவது வழக்கம் - ஆனால் அடிக்கடி அனுப்புவது குறிப்பிடத்தக்கது.இந்த வகையில் இஸ்ரோ உலக விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை படைத்தது.ராக்கெட் செலுத்தப்பட்டதும் முதலில் கார்ட்டோஸாட்-2ஏ விண்ணில் நிலைநிறுத்தப்படும்.அதன் பின்னர் ஒவ்வொரு செயற்கைக் கோளாக நிலை நிறுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் 100 விநாடிகள் பிடிக்குமாம். அதாவது 1000 விநாடிகளுக்குள் 10 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

பி.எஸ்.எல்.வி -சி9 சிறப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். சனிக்கிழமை இரவு அவர் திருப்பதிக்கு வந்தார். அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகளை மாதவன் நாயர் மேற்கொண்டார். நேற்று காலை சுப்ரபாத நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.Labels:

1 Comments:

Blogger வால்பையன் said...

//பி.எஸ்.எல்.வி -சி9 சிறப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். சனிக்கிழமை இரவு அவர் திருப்பதிக்கு வந்தார். அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகளை மாதவன் நாயர் மேற்கொண்டார். நேற்று காலை சுப்ரபாத நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். //

மத்ததெல்லாம் சரி, இது மட்டும் எதுக்குன்னு தெரியல!
1008 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கிற லாரிய ஒரு எலும்பிச்சம்பழம் காப்பாத்துமே அது மாதிரி இருக்கு!
என்னைக்குத்தான் திருந்துவாங்களோ

வால்பையன்

May 1, 2008 at 11:58 AM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home