தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Saturday, June 21, 2008

சிம்புவின் அடுத்தது 'டண்டனக்கா'!

சிம்புவின் குறும்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. வல்லவன் படத்துக்காக நயன்தாராவின் உதட்டைத் தன் பற்களால் கவ்வி இழுத்து அதைப் போஸ்டராக்கி பரபரப்பு பண்ணியவர், இப்போது தன் குறும்பை டைட்டிலிலேயே காட்டத் தொடங்கிவிட்டார்.

சிலம்பாட்டம் படத்துக்குப் பிறகு ஜெமினி நிறுவனத்துக்காக ஒரு படம் செய்கிறார் சிம்பு. இந்தப் படத்துக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் போடா போடி.

முழுக்க முழுக்க கனடாவில் எடுக்ப்படவிருக்கும் இந்தப் படத்தின் பெயரை இப்போது திரு போடா திருமதி போடி என மாற்றம் செய்திருக்கிறார் சிம்பு. அதோடு விட்டாரா... டண்டனக்கா கப்பிள் என அந்தத் தலைப்புக்குக் கீழே ஒரு உப தலைப்பையும் கொடுத்திருக்கிறார் சிம்பு.

அது சரி... சிம்புவின் அந்த டண்டனக்கா ஜோடி யார்? சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி என்கிறார்கள்.

Labels:

8 Comments:

Blogger தமிழ்சினிமா said...

டண்டனக்கா... டணக்குணக்கா... சிம்புவ சோலிய முடிச்சிபுட்டிகளே...

June 21, 2008 at 3:30 PM

 
Blogger கூடுதுறை said...

நன்றி தமிழ்சினிமா...

சற்றே தங்கள் வழியில் சென்று பார்த்தேன்

June 21, 2008 at 4:11 PM

 
Anonymous Logu said...

Good combination, simpu + varalatchumi

June 21, 2008 at 4:27 PM

 
Blogger கூடுதுறை said...

சிம்புவிடம் ஜோடி என்றால் சும்மாவா?

கண்டிப்பாக நன்றாக எதிர்மறை விளம்பரம் கிடைக்கும்

June 21, 2008 at 4:36 PM

 
Blogger தமிழ்சினிமா said...

எங்க வழியா... என்னவோய்... நீர் நெல்லைக்கே அல்வா கொடுக்கிற பார்ட்டியா தெரியுதே...

June 21, 2008 at 5:50 PM

 
Blogger கிரி said...

படம் டண்டனக்கா ஆகாம இருந்தா சரி :-))))

June 21, 2008 at 7:57 PM

 
Blogger கூடுதுறை said...

அது நம் கையில் கிரி சிம்பு கையில்தான் உள்ளது

June 21, 2008 at 8:01 PM

 
Blogger rapp said...

ஆஹா, விஜயகாந்த் வெச்ச சூனியமா, இல்லை நக்மா வெச்ச சூனியமா? சரத்குமார் குடும்பத்துக்கு கடவுள் ஏன் இப்டி ஒரு தண்டனயக் கொடுத்தார்?

June 22, 2008 at 4:02 AM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home