தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Friday, June 20, 2008

யு.எஸ்.ஸைக் கலக்கும் தசாவதாரம் - ஒரு பார்வை

கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களும் தசாவாதாரம் பற்றிய விமர்சனம் எழுதிவிட்டனர்। நான் மட்டும் எதாவது எழுதாவிட்டால் என்னை எதாவது செய்துவிட்டால்? ஆகவே இந்த பதிவு...

போன வருடம் தமிழ் வாழும் நல்லுலகத்தினையே கலக்கிய ரஜினியின் சிவாஜி படத்தையே இதுவரை பார்க்காதவன் நான்

விரைவில் கலைஞர் டீவியில் பார்த்துவிடலாம் என இருக்கிறேன்।

அடுத்து தலைப்பிற்கு சம்பந்தமான செய்தி

கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கு அமெரிக்காவில் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளதாம்।

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 50 நகரங்களில் தசாவதாரம் திரையிடப்பட்டுள்ளது. இங்கு அனைத்துக் காட்சிகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக வார இறுதி நாட்களில் அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ் புல் ஆகியுள்ளனவாம்.

வசூலைப் பொறுத்தவரையில், வார இறுதி நாட்களில் இதுவரை எந்த தென்னிந்தியப் படங்களுக்கும் கிடைத்திராத வகையில் தசாவதாரத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதன் மூலம் முந்தைய சாதனைகளையும் தசாவதாரம் முறியடித்துள்ளதாம்.

தமிழ் தவிர தசாவதாரத்தின் தெலுங்குப் பதிப்புக்கும் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சிரஞ்சீவி படங்களுக்கு இணையான வரவேற்பு தசாவதாரத்திற்குக் கிடைத்துள்ளதாம்.

அனைத்துத் தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறதாம். நீண்டவரிசையில் நின்று ரசிகர்கள் டிக்கெட் பெற்று படம் பார்க்கிறார்களாம்.

சமீபத்தில் ரிலீஸான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள சர்க்கார் ராஜ் படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பை விட தசாவதாரத்திற்கு அதிக அளவிலான வரவேற்பு காணப்படுகிறதாம்.

தசாவதாரத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் ஆங்கில சப் டைட்டிலுடன் அமெரிக்காவில் திரையிடப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழர்கள், தெலுங்கர்கள் தவிர மலையாளிகள், கன்னட மொழி பேசுவோரும் பெருமளவில் திரண்டு வந்து படத்தை ரசித்துப் பார்க்கிறார்களாம்.

அதேபோல அமெரிக்கர்களும் படத்தைப் பார்க்க திரளுகின்றனராம். படத்தின் ஸ்பெஷல் எபக்ட்ஸ் சிறப்பாக இருப்பதாக அவர்கள் பாராட்டுகின்றனராம்.

Labels:

2 Comments:

Anonymous Anonymous said...

இந்தியாவை கலக்கியது யு.எஸ்ஸையும் கலக்கிவிட்டதா?

நல்லது

June 20, 2008 at 3:19 PM

 
Blogger கூடுதுறை said...

நன்றி பிரபாகரன்

June 20, 2008 at 3:24 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home