தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Wednesday, June 25, 2008

அடுத்த ஆண்டில் மகளிர் டுவென்டி- 20 போட்டி- ஆலோசனைகள் தேவை

இப்போட்டிகள் பெரும் வெற்றி பெற பதிவர்கள் ஆலோசனைகளை பின்னுட்டமாக தருக

முதல்முறையாக மகளிருக்கான டுவென்டி- 20 கிரிக்கெட் போட்டிகளை அடுத்த ஆண்டில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் இடையே டுவென்டி- 20 போட்டிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக அண்மையில் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடர் அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையடுத்து மகளிர் பிரிவிலும் டுவென்டி- 20 போட்டிகளை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆடவர் தொடருடன், மகளிர் தொடரையும் நடத்த அது தீர்மானித்துள்ளது.

இதன்படி ஆடவர் டுவென்டி- 20 போட்டிகள் லார்ட்ஸ், ஓவல் மற்றும் டிரென்ட்பிரிட்ஜ் மைதானங்களில் நடைபெறும். டான்டன் மைதானத்தில் மகளிர் போட்டிகள் நடத்தப்படும்.

மகளிர் டுவென்டி- 20 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை மற்றும் மேற்கு இந்தியத்தீவு அணிகள் பங்கேற்கும்.

Labels:

2 Comments:

Blogger SurveySan said...

இம்புட்டு விஷயத்தை ஒரே பதிவுல போட்டா யாருங்க படிப்பா?

பிட்டு பிட்டா போடுங்க.

அருமையான விளக்கங்களுக்கு நன்னி!

:)

June 26, 2008 at 10:44 AM

 
Blogger கூடுதுறை said...

நன்றி சர்வேசன்

பின்னுட்டத்தை மாற்றி போட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன்

June 26, 2008 at 10:53 AM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home